இந்தியாவில் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் திவ்யாஸ்த்ரா Mk3 என்ற ட்ரோன் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
கவா UAV பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரித்துள்ள திவ்யாஸ்த்ரா Mk3 என்ற ட்ரோன், துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
இந்த ட்ரோனை, காரில் இருந்து பறக்க வைக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் துல்லியத் தாக்குதல் அமைப்பை வடிவமைத்து, குறுகிய காலத்தில் வெற்றிகரமாக பறக்கச் செய்யும் திறனை இந்தியா நிரூபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















