கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் - சிறப்பு தொகுப்பு!
Oct 13, 2026, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2026, 09:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய எரிபொருள் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் அம்பலமாகியுள்ளது. போருக்குத் தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக உக்ரைனின் தூதுக்குழு அமெரிக்காவில் இருக்கும் நிலையில், ரஷ்யாவுடன் டீசல் இறக்குமதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022-ல் தொடங்கிய உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதும் வரி விதித்த அமெரிக்க அதிபர், கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களையும் தடை பட்டியலில் சேர்த்தது.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட , ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை தண்டனை வரி விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

உலகளாவிய சந்தைகளை நிலைப்படுத்துவதற்காக 2022-ல் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா குறிப்பாகக் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் அதே கொள்முதல் மீது வரிகளை அந்நாடு விதித்ததாகவும் கூறியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2024-ல் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் 78.02 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த அடிப்படையில் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் தனியாகக் குறிவைப்பது நியாயமற்றது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் தான், ரஷ்ய அதிபர் புதினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3,00,000 டன் டீசலை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த டீசலைப் பெறுவதற்காக, ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் ஏற்றுமதி தடைகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அமெரிக்க கருவூலத்துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வரும் நவம்பர் 3-ல் வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்காக ட்ரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்தால் அது உக்ரைன் போருக்கு நிதி வழங்குவதாகும் என்று கூறிவிட்டு, தனது தேவைக்காக ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் போட்டிருப்பது அமெரிக்காவின் சுயநலம் மற்றும் இரட்டை நிலையை எடுத்துக்காட்டுவதாக புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இதற்கிடையே ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டை அனுமதிப்பது என்ற ட்ரம்பின் அதிரடி முடிவை கடுமையாக விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸகி, இது போருக்கான முதலீடு என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: russia ukraine war liverussia ukraine war newsRussian fuel issuediesel to americaRussia Ukraine warputinTrumprussia ukraine war latest
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Related News

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies