புத்தக கொள்முதல் முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக திமுக மாற்றியுள்ளது என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கோவை பெரியார் நூலகத்தில் புத்தக கொள்முதல் செய்வதில் கடந்த திமுக ஆட்சி முறைகேடு செய்துள்ளது அம்பலமாகி உள்ளது எனவும், ஊழல், முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாகவே திமுக மாற்றிவிட்டது எனவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
நூல் கொள்முதலுக்கான பரிந்துரை குழுவில் இருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே ஊழலை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதல் டெண்டரை கடந்த ஆண்டு நவ.5ம் தேதி திமுக அரசு தான் வெளியிட்டது எனவும் கூறியுள்ளார்.
பெரியார் பெயரை வைத்து ஊழல் செய்த திமுக இனி தலைகுனியும் என்றும், திமுக அரசில் தரமற்ற நூல்களை பரிந்துரை செய்து, ஊழல் செய்ததை கண்டு உலகமே கைக்கொட்டி சிரிக்கிறது எனவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.
மேலும், பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையும் வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக, இனி மக்கள் மன்றத்தில் தலை நிமிரவே முடியாது எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
















