மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி - சிறப்பு தொகுப்பு!
Nov 26, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 26, 2026, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப் சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணியில் மீண்டும் சிரோமணி அகாலிதளம் இணைந்துள்ளது. 2029 டிசம்பர் 31-க்குள் பஞ்சாபை முழுமையாகப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பதான்கோட்டில் தொடங்கி வைத்த ‘போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்’ என்ற யாத்திரை 13 நாட்களில் மால்வா, மாஜா மற்றும் தோவாபா ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து 117 தொகுதிகளிலும் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் சென்று ஜலந்தரில் நிறைவடைந்தது.

கடந்த செப்டம்பர் 30 ம் தேதி ஜலந்தரில் நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்’ யாத்திரையின் நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 2029 டிசம்பர் 31-க்குள் பஞ்சாபை முழுமையாகப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியை அளித்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் சிரோமணி அகாலி தளமும் 2027 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தங்கள் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதன் மூலம், பாஜகவின் நீண்டகால நட்பு கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளது.

குரு நானக் தேவ் அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘குரு பர்வ்’ (Guru Parv) நன்னாளில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோரை அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சந்தித்து இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அகாலி தளம், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

அகாலி தளத்தின் வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணியை முழுமையாக்குகிறது என்று குறிப்பிட்ட அமித் ஷா, பிரதமர் மோடி, பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி மற்றும் இரு கட்சிகளின் பிற தலைவர்களுக்கு இடையிலான நீண்டகால உறவையும் நினைவு கூர்ந்துள்ளார்.

2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து அனைத்து 117 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும், கூட்டணியில் அகாலி தளம் ‘மூத்த சகோதரர்’ (Bada Bhai) என்ற நிலையில் இருந்து முதல்வர் பதவியைப் பெறும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்றும், போதைப்பொருள் பழக்கத்தையும் ஊழலையும் ஒழித்தல், தேசியவாத சக்திகளை வலுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளின் குறைகளைத் தீர்த்தல் ஆகியவை இந்தக் கூட்டணியின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

2017 மற்றும் 2022 தேர்தல்களின் போது சில மாதங்களில் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அமித் ஷா, 2029 டிசம்பர் 31-க்குள் பஞ்சாபை முழுமையாகப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்துள்ளார்.

பஞ்சாப் விவசாயிகள் எதிர்கொள்ளும் அடிப்படைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த கூட்டணி பாடுபடும் என்று தெரிவித்த அமித் ஷா, பஞ்சாபை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும், இந்து-சீக்கிய சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு கட்சிகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீக்கிய குருக்களை அவமதித்தவர்களை பாஜக-வும், சிரோமணி அகாலி தளமும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல, மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உணர்வுபூர்வமான கூட்டணி என சுக்பீர் சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

Tags: JalandharBJP-led alliancedrug-free punjabPathankot.bjphome minister amit shahShiromani Akali Dal
Share
Tweet
SendShare
Previous Post

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

Related News

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் – முத்துக்குமார் வாக்குமூலம்

திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 2,300 கோடி வரை இழப்பு – தணிக்கைத் துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

புத்தக கொள்முதல் முறைகேடு – ஆவணங்களை ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமன் நியமனம்!

இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை – மோகன் பாகவத்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு!

திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – மதுரையில் கொட்டும் மழையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை – திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதா? – தவெக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies