19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்பது உறுதியானது.
இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான விளையாட்டுச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் நமது இந்திய கால்பந்து அணிகள் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Good news for Indian football lovers!
Our national football teams, both Men’s and Women’s, are set to participate in the upcoming Asian Games.
The Ministry of Youth Affairs and Sports, Government of India, has decided to relax the rules to facilitate participation of both the…
— Anurag Thakur (@ianuragthakur) July 26, 2023
இதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, விதிமுறையைத் தளர்த்தி அனுமதி வழங்கியதற்குப் பாரதப் பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.