'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Sep 3, 2026, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

பாத யாத்திரை, வெறும் அண்ணாமலையின் பாத யாத்திரை அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் பாத யாத்திரை. கூட்டணிக்  கட்சியினரின் பாத யாத்திரை. இது  ஒரு வேள்வி, இது  ஒருதவம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 29, 2023, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த   ஒவ்வொரு  வீடுமே  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது என்று  என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடக்க விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளையும் 168 நாட்களில் பாதயாத்திரையாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுக் காலத்தில் தமிழகம் பெற்ற பயன்களை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்து சொல்ல உள்ளார். இந்த பாத யாத்திரையின் தொடக்க விழா நேற்று இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் பாதயாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில் பேசிய அண்ணாமலை,

இந்தப்  பாத யாத்திரை, வெறும் அண்ணாமலையின் பாத யாத்திரை அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் பாத யாத்திரை. கூட்டணிக்  கட்சியினரின் பாத யாத்திரை. இது  ஒரு வேள்வி, இது  ஒருதவம், இது ஒரு சங்கல்பம்,  சுவாமி விவேகானந்தர்  கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரை நடந்தே வந்தார். அதே போல் அமெரிக்காவிற்குச்  சென்று திரும்பிய  சுவாமி விவேகானந்தர் இராமேசுவரத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்றார். இந்த வார்த்தையை, மெய்ப்பட வைத்தவர், பிரதமர் நரேந்திர மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைத்து வருகிறார். கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறார். பிரதமர் ஒரு சாதாரண மனிதர், எனவேதான் அவர் சாதாரண மனிதர்களுக்கான ஆட்சியை  நடத்தி வருகிறார். தமிழகத்திற்கு இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.

மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார், தமிழை நேசிக்கிறார், திருக்குறளை உலகம் எங்கும் எடுத்துச்செல்கிறார். திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதனை 100 மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தி இருக்கிறார் .

தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த  ஒவ்வொரு வீடுமே  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது.  கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவைத்  தன் மூச்சாக கொண்டுச்  செயல்படுகின்ற நாம் பிரதமர் நரேந்திர மோடி, 2024 ல்  மீண்டும் பிரதமராக வர வேண்டும். 3-வது முறை அவர் பிரதமராக அமரும் போது இந்தியா 3-வது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்தப் பாத  யாத்திரைக்குத்  தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. மாற்றும் . இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Tags: k Annamalai Bjp
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டில் புற்றுநோயால் பெண்களே அதிகம் இறந்துள்ளனர்.

Next Post

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies