கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Sep 5, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவில் உண்டியல்களைக்  கையாளுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் 99.7 சதவீத கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை எனவும், அரசு அதிகாரிகளைத்  தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களை நீக்க உத்தர்விட வேண்டும் என திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்ககராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான மூன்று வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதேபோல, அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் உண்டியல்களை கையாள தக்கார்களுக்கு தடை விதிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இரு சாவிகளையும் கோவில் தக்கார்கள் வைத்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்து சமயஅறநிலையத் துறை  சட்டத்தில், கோவில் உண்டியலின் இரு சாவிகளில் ஒன்று அறங்காவலர் குழு வசமும், மற்றொன்று செயல் அலுவலர் வசமும் இருக்க வேண்டும். அறங்காவலர்கள் இல்லாத போது தக்காரும், சம்பந்தப்பட்ட அதிகாரியும் உண்டியலை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகை

Next Post

ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies