சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Sep 5, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் ஓசியனிக் எடிபிள் இன்டர்நேஷனல் என்கிற தனியார் நிறுனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், கடல் உணவுகள் மற்றும் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப், ஜேம்ஸ் வால்டர், டோமினிக் சேவியர் ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்நிறுவனம் திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக காய்கறி, பழப் பண்ணை வைத்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ.,, ஐ.ஓ.பி. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 225 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்நிறுவனம் கடன் பெற்ற தொகையை மத்திய அரசு அனுமதி இன்றி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சூளைமேடு தலைமை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான மேற்கு தாம்பரம், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அமைந்தகரை, தியாகராய நகர், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே, இந்நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல வங்கிகளில் 104 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அந்தப் பணத்தையும் இதேபோல முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐ.ஓ.பி. வங்கி சார்பில் சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, இந்நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வங்கியில் கடன் வாங்கிய ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Ed
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி

Next Post

ஒடிசாவின் அதிவேக பெரிய துறைமுகம் பாரதீப் துறைமுகம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies