ராஜஸ்தானுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்க என்.எல்.சி ஒப்பந்தம் !
Oct 18, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்க என்.எல்.சி ஒப்பந்தம் !

300 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்கான நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா லிமிடெட் ராஜஸ்தானுடன் கையெழுத்திட்டுள்ளது

Murugesan M by Murugesan M
Aug 18, 2023, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்), 300 மெகாவாட் சூரிய மின்சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிறுவனம் 510 மெகாவாட் சூரிய மின் திட்டத் திறனைப் ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்சாரில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டத் திறன் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்கான இந்த ஒப்பந்தம், என்.எல்.சி இந்தியா லிமிடெட், ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இடையே 2023 ஆகஸ்ட் 17 அன்று ஜெய்ப்பூரில் கையெழுத்தானது. இதில் ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநர் (நிதி) டி.கே.ஜெயின், என்.எல்.சி இந்தியா லிமிடெடின் பொது மேலாளர் டி.பி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தப் பசுமை மின்சாரமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கொள்முதல் இலக்குகளை அடைய உதவும்.

இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் 0.726 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1.40 ஜிகாவாட் உற்பத்தித் திறனைத் தவிர, என்எல்சிஐஎல் இந்தத் திறனை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்துவது இதுவே முதல் முறையாகும். என்.எல்.சி.ஐ.எல் தற்போது 1,421 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030-க்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.

Tags: solarnlc
Share
Tweet
SendShare
Previous Post

ஒகேனக்கல் நீர்வரத்து 13,500 கனஅடி அதிகரிப்பு!

Next Post

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies