ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி. நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர் காமராஜரை, அப்புச்சி என்று அரவணைத்து ஆதரவளித்த மண். அதே அன்பை, நம் எம்.ஆர்.காந்தி ஐயாவுக்கும் அளித்துக் கொண்டிருக்கும் மண். நாகர்கோவில் ரயில் போக்குவரத்து வசதி நம் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டது.
காமராஜரால் உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இன்று திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பெயரிலான அரங்கத்தை பெயர் மாற்ற முயற்சித்து, பாஜகவின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது திமுக.
மோடியின் முகவரி : நாகர்கோவில்
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற செல்லத்தங்கம், சுவநிதி திட்டத்தின் மூலம் பலன்பெற்ற மீன்வலை உற்பத்தியாளர் ரெத்னா, தேசிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பலனடைந்த மீனாட்சி சுந்தரம், முத்ரா கடனுதவி மூலம் கைக்கடிகாரக் கடையை விரிவுபடுத்திய தினேஷ்குமார், மகளிர் சுய உதவிக் குழு மூலம் பலனடைந்த திருமதி விஜயலெட்சுமி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
இன்றைய #EnMannEnMakkal பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி.
நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர்… pic.twitter.com/FyxAtE9sxo
— K.Annamalai (@annamalai_k) August 18, 2023
குமரி மாவட்ட மக்களுக்கும், மீனவ சமுதாய மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாதக் கூட்டணியை, குமரி மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தயாராகி விட்டார்கள் என்பது, இன்றைய பெரும் மக்கள் திரளிலிருந்து தெளிவாகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.