ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப் பிறகு, 300 படப்பிடிப்புகள் நடந்துள்ளதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 2019 ம் ஆண்டு 370வது சிறப்பு அந்தஸ்து இரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாகப் பிரித்து நேரடியாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு யூனியன் பிரதேசங்களில் அமைதி திரும்பி சுமுகமான சூழல் நிலவி வருவதால், புதிய படப்பிடிப்புக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், படப்பிடிப்பு நிகழ்ச்சியைக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, “காஷ்மீர் 370வது சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டப் பின் புதிய திரைப்பட கொள்கை அமலுக்கு வந்தது. அதனால், ஜம்மு காஷ்மீர் சமூக சூழ்நிலையும், இயற்கை சூழ்நிலையும் படப்பிடிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளதால், பல்வேறு மொழிகளில் 300 படப்பிடிப்பு தொடங்கினார்கள். அதனால் 1980களில் நடந்த படப்பிடிப்புகள் போல, இன்றைய சூழ்நிலை உள்ளது.
படப்பிடிப்புகள் எண்ணிக்கை கூடுவதால் உள்ளூர் பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது எனத் தெரிவித்தார்.