நாடு முழுதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும், ‘அம்ரித் சரோவர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்கள் பின்தங்கிஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தபட்சம் 75 அமிர்த நீர்நிலைகளைக் கட்ட / புனரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமிர்த நீர்நிலைகள் இயக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
இதுவரை, அடையாளம் காணப்பட்ட 1,12,277 அமிர்த நீர்நிலைகளில், 81,425 அமிர்த நீர்நிலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மொத்தம் 66,278 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டடும், புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும், ஆகஸ்ட் 15க்குள் 50,000 நீர்நிலைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 50,071 அமிர்த நீர்நிலைகள் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ளன. இந்த மாநிலங்களில் 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்க வேண்டும் என்ற இலக்கை சில மாவட்டங்கள் எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.