தக்காளியை தொடர்ந்து பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு!
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தக்காளியை தொடர்ந்து பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 23, 2023, 11:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில மாதங்களாக வரத்து குறைவு காரணமாக உச்சத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலை தற்போது குறையத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பருப்பு விலை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பருப்பு பயிரிடுதல் நடப்பாண்டில் பாதியளவாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை 37 சதவீதம் அதிகரித்ததால் சில்லறைப் பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத அளவில் ஜூலையில் 7.5 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த ஜூலையில் 34.1 சதவீதம் விலையுயர்ந்த துவரம் பருப்பும், 9.1 சதவீதம் விலை உயர்ந்த பாசிப்பருப்பும் இனி மேலும் விலை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். நடப்பு காரிஃப் பருவத்தில் 114.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டாலும், போதிய மழை இல்லாததால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது எனக் கூறுகின்றனர்.

இந்த மாதம் வழக்கத்தை விட மழை குறைவாக பெய்துவந்ததே இதற்குக் காரணம் என கூறுகின்றனர். உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வழக்கத்தைவிட மிக மிகக் குறைவாகப் பெய்துள்ளது. அதேபோல் நாட்டின் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவும் ஆகஸ்ட் 17 நிலவரப்படி 62 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்த்தேக்கங்களில் இருந்த நீரின் அளவு 76 சதவீதமாக இருந்துள்ளது. போதிய பருவமழை பெய்யாததால், பருப்பு விதைக்கப்பட்ட பரப்பளவு கணிசமாகக் குறைந்துள்ளதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு விலையை அதிகரிக்கச்கூடும் என தெரிவந்துள்ளது.

Tags: dhalmoongdhaldhalprice
ShareTweetSendShare
Previous Post

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா? குஷியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் – என்ன காரணம்?

Next Post

“திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் ‘இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன்”- டிரம்ப் அடாவடி. .

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies