"திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் 'இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன்"- டிரம்ப் அடாவடி. .
Sep 27, 2026, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் ‘இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன்”- டிரம்ப் அடாவடி. .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 23, 2023, 11:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

தோல் தயாரிப்புகள், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ‘சிறப்பு வர்த்தக நாடு’ என அங்கீகாரம் இருப்பதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா குறைவான வரிகளையே  விதிக்கிறது.

வழக்கமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு கூடுதல் வரி விதிக்கும்நடைமுறைக்கு ஏற்கனவே  அமெரிக்க அதிபராக இருந்தபோது டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக கூறி இந்திய வரி விதிப்பு முறையை கடுமையாக அவர் சாடினார். இருநாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாடு உள்ளதாகவும் இதன் மூலம் அமெரிக்கா பாதிப்படைவதாகவும் கூறி சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தப்போவதாக அவர் அச்சுறுத்தினார் . இந்த அறிவிப்பால் அப்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய நாட்டை ‘வரிவசூல் ராஜா’ என சாடிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பு குறித்து பேசினார்.

“பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை” எனக்கூறும் அவர் “தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்” எனப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் “அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி” என்றார்.

Tags: Indiaworldnewsamericadonalddrump
Share
Tweet
SendShare
Previous Post

தக்காளியை தொடர்ந்து பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு!

Next Post

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை!

Related News

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies