சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?
Sep 27, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 23, 2023, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை இரண்டு விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதை இதில் காண்போம்.

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் திட்டமான சந்திரயான்-1 கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-1 செயற்கைக் கோள் தயாரிப்புக்கு 470 கோடி ரூபாய் செலவு செய்யபட்டது.

அதன் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிக எதிர்பார்ப்புடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியில் கடைசி கட்டத்தில் இத்திட்டம் தோல்வியடைந்தது.

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்- 2 திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 978 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. சந்திரயான் -2 தோல்வி அடைந்த நிலையில் அதில் ஏற்பட்ட தவறுகளையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் திருத்திக்கொண்டு இஸ்ரோ கடந்த ஜூலை -14 ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் ஏவியது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்திற்காக மொத்தம் 615 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 திட்டத்தில், செயற்கைகோளை வடிவமைக்க 375 கோடி ரூபாயும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், நேவிகேசன் உள்ளிட்டவைகளுக்காக 603 கோடி ரூபாயும் செலவானது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டை வடிவமைக்க 365 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், நிலவுக்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவும் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை கருவிகளுக்காக வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.

சந்திரயான் -2 இல் ஏவப்பட்ட ஆர்பிட்டர் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவை சுற்றி வருகிறது. தற்போது சந்திரயான் 3 இல் ஏவப்பட்டுள்ள லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகள், ஏற்கனவே நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக சந்திரயான் 3 திட்டத்தில் ஆர்பிட்டர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. மேலும், விண்கலத்தின் அமைப்பை எளிமைப்படுத்துவது, கடினமான பெரிய அமைப்புகளை குறுக்குவது, எந்த பொருளில் இருந்தும் அதிகபட்ச பயனை பெற முயல்வது ஆகியவற்றைப் பின்பற்றுவதால் மற்ற நாடுகளை விட குறைந்த செலவில் நிலவு குறித்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்த முடிவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: isro moon mission chandrayaan 3chandrayaan-3budgetChandrayaan 3chandrayaan 3 moon mission
Share
Tweet
SendShare
Previous Post

சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும் 2 தி.மு.க. அமைச்சர்களுக்கு சிக்கல்!

Next Post

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

Related News

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies