சென்னை காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகர் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவைப் பார்க்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் கஞ்சா போதையிலிருந்த 3 பேர் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்தப் போதை கும்பல் திருமாவளவன் என்பவரிடம் பணம் கேட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி , சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்ததின் பேரில் வந்த காவலர் சரவணன் பணம் கேட்டு மிரட்டியவர்களை விசாரித்துள்ளார்.
அப்போது, கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் காவலரைத் தாக்க உள்ளனர் பின்னர் காவலரை நோக்கி கத்தியுடன் துரத்தியபோது அதிர்ச்சியடைந்த காவலர் தப்பித்தால் போதுமென ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது இணையத்தில் வெளியாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.