சர்ச்சைக்குறிய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவிப்பதில் மம்தா பானர்ஜி எப்போதும் சளைத்தவர் இல்லை. அந்த வகையில் மீண்டும் அவர் சந்திரயான் -3 குறித்து பேசியது கேலிகிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது .
ஆகஸ்ட் 23 நேற்று, இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்தபோது, இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் சந்திரயான் -3 குறித்து மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, இந்தியாவில் இருந்து நிலவில் முதலில் கால் பதித்தவர் ராகேஷ் ஷர்மா என குறிப்பிடுவதற்கு பதில் ராகேஷ் ரோஷன் என்று குறிப்பிட்டார்.
சந்திரயான் -3 வெற்றி குறித்து அவர் பதிவிட்ட காணொலியில் கூறியதாவது, ” நிலவில் முதலில் கால் பதித்த ராகேஷ் ரோஷன் என்பது எனக்கு நினைவிருக்கிறது எனவும் அப்போது இந்திரா காந்தி அவரிடம் நிலவில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா எப்படி இருந்தது என்று கேட்டார்,” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்கும் நேரலையை பார்ப்பதற்கு பதில் ஹிருத்திக் ரோஷன் நடித்த “கோயி மில் கயா” திரைப்படத்தை பார்த்திருக்கலாம் என்று நெட்டிசென்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தை கேலிசெய்யும் வகையில், நடிகர் ராகேஷ் ரோஷன் விண்வெளி உடை அணிந்தவாறு மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை பாலிவுட் நடிகருடன் குழப்பியதற்காகவும், ராகேஷ் ஷர்மாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணத்தை ‘மூன் லேண்டிங் மிஷன்’ என்றும் கூறியதற்காக மம்தா பானர்ஜியை சமூக ஊடக மீம்ஸ்கள் மூலம் நெட்டிசென்கள் கேலி செய்து வருகின்றன.
இந்நிலையில் அடிப்படைகளை தவறாகப் புரிந்து கொள்ளும் அரசியல்வாதி பட்டியலில் மம்தா பானர்ஜி மட்டும் அல்ல. ராஜஸ்தானின் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் சந்த்னாவும் சந்திரயான்-3 தரையிறங்கும் விண்கலத்தில் பயணித்த பயணிகளை வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.