ICC ஆண்கள் ODI உலகக் கோப்பை 2023 விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றிபெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். அதில் கௌதம் கம்பீர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் துணிச்சலாக 97 ரன்களை எடுத்த கௌதம் கம்பீர்,” ஒரு அணியின் வெற்றிக்கான ரகசியம், அந்த அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதில் தான் உள்ளது என்றும், நம் இந்திய நாட்டு கிரிக்கெட் கலாச்சாரத்தில், மக்கள் அனைவரும் ஒரு தனிநபரை மட்டுமே மையமாக கொண்டு போற்றுவதாக முன்பே கூறியிருந்த நிலையில் இப்போது மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார்.
அதை தொடர்ந்து 2011 உலகக்கோப்பையை பற்றி பேசத் தொடங்கினர், ” 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு கேப்டன் தோனி மட்டும் காரணம் இல்லை, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தான் முக்கிய காரணம். ஆனால் தோனிக்கு கிடைத்த முக்கியத்துவம் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” உண்மை என்னவென்றால் உலகக்கோப்பைக்கு முன்பு, தோனி விளையாட்டில் பின்தங்கிருந்தார். அதனால் பேட்டிங் வரிசையில் யுவராஜ் சிங்க்கு பதிலாக 5 ஆம் இடத்திற்கு மாறி சிறப்பாக விளையாடி இந்தியாவை இரண்டாம் உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்றார், நானும் அவருக்குச் சமமாக 97 ரன்கள் எடுத்தேன், இருப்பினும் ஆட்டத்தை வெற்றி பெறவைக்கும் சிக்சரை தோனி அடித்ததால் அவர் என்றும் மக்கள் மனதில் உள்ளார் ” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ” என்னை மறந்துவிடுங்கள், ஆனால் நாம் யாரும் யுவராஜ்க்கு கொடுக்க வேண்டிய பாராட்டை கொடுக்கவில்லை. இறுதிப்போட்டியில் ஜாகீர் கானின் முதல் ஸ்பெல் பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்? யாரும் பேசவில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை குவித்தவர் அவரை பற்றியும், எம்எஸ் தோனி விளையாடிய ஒரு சிக்ஸரைப் பற்றியும் இப்போதும் பேசுகிறோம். ஒரு தனிநபரை மட்டுமே பாராட்டும் போது, நாம் அணியை மறந்துவிடுகிறோம்.
இந்த அறிக்கையில் நான் ஒரு புதிய சர்ச்சையைத் தொடங்க விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் கொண்ட இந்தியா அணி ஒன்றாக செயல்பட்டு விளையாடுவதை உறுதிசெய்ய வேண்டும். 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இந்தியா ஐசிசி கோப்பையை வென்றதில்லை. இந்த முறை சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்” என்று வெளியிட்டுள்ளார்.