உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில், முக்கிய உதிரி பாகங்கள், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கும் முயற்சியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி உலகயே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
குறிப்பாக, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலம், தரையிறங்கிய நிலையில், விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில் நுட்பத்தில் இயங்கும் எல்.பி.ஜி பிளடே் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உதிரி பாகங்கள், நாசரேத்தில் உள்ள கைத்தொழில் பாடசாலை அட்வான்ஸ் ட்ரெயினிங் சென்டரில் உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரயான் 3 வெற்றியில், திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுக்கு முக்கிய பங்கு இருப்பதுபோல், விக்ரம் லேண்டரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பங்களிப்பும் உள்ளது, தமிழக மக்களிடையே மேலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.