இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!
Apr 27, 2026, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், சீட்டுக்கட்டு போல பல வீடுகள் சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியப் பருவமழை, தீவிரமடைந்திருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இடை இடையே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகவும், மழை கொட்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவு, மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரிடர் பாதித்த மாநிலமாக முதல்வர் சுக்விந்தர் சுகு அறிவித்திருக்கிறார். மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 2,022 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த இழப்பு 8,014.61 கோடி ரூபாய் என்று முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீட்டுக்கட்டு போல ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலை அடிவாரத்தில் உள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிவதை காண முடிகிறது. இந்தக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, “இமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு வண்ண (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: himachal pradesh
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

Next Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies