ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பகவத் அவர்களின் 30 உரைகள் அடங்கிய நூலின்வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய நாளான ‘விஜயதசமி விழாவை’ நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூரில், இந்த கொண்டாட்டங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை.
ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி தினத்தன்று, பரமபூஜனீய சர்சங்கசாலக் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர், தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து தேசத்திற்காக சிறப்புரையாற்றுவார். அவரது இந்த உரை இந்தியா மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியேயும் பலதரப்பட்ட மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன்ஜி பகவத் அவர்கள் 2009 முதல் இவ்விழாவில் உரையாற்றி வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஆற்றிய விஜயதசமி விழாவின் உரைகளின் தொகுப்பு நூலைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலின் வெளியீட்டு விழா நீதியரசர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொது செயலர் ஆர்.வி.உதயகுமார் நூலை வெளியிட ,ஆர். எஸ். எஸ். மாநில இணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரையாற்றினார்.
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் புதுச்சேரி ஆரோவில் ஃபவுண்டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகா IPS மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் M பஞ்சநாதம் ஆகியோர் முதல் பிரதியை பெற்று கொண்டனர்.
இதில் ஆர்எஸ்எஸ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர் அறிமுக உரை ஆற்றினார்.