எக்ஸ் தளத்தில் புதிதாக வரவிருக்கும் அம்சங்களை எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் செயலியை ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்த புதியக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
தற்போது மேலும் சில அம்சங்களாக தொலைப்பேசி எண்கள் இன்றி வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்க உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்தார்.
இந்த புதிய அம்சத்தை ios, android, Mac ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால் எக்ஸ் செயலி உலகளாவிய அளவில் அடுத்தகட்டத்தை அடையும் என்று கூறப்படுகிறது.