மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்தது!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்தது!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்துள்ளது.

குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவ மழை பொய்த்துப் போனதால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 792 கன அடியிலிருந்து 549 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தொடர்ந்து, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது, 17.79 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விடப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும், ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கும் என்பதால் சுரங்க மின் நிலையத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு அணையின் கீழ் மட்ட மதகுகள் வழியாகப் பாசனத்திற்குத் திறக்கப்படும். இதனால், சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: metur dam
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு !

Next Post

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies