விண்ணில் பாய்ந்தது "ஸ்லிம்" விண்கலம்!
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் பாய்ந்தது “ஸ்லிம்” விண்கலம்!

3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 4-வது முறை வெற்றிகரமாக ஏவப்பட்டது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 12:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவை ஆய்வு செய்வதற்காக, விண்ணில் செலுத்த 3 முறை திட்டமிட்டப்பட்டு, மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜப்பான் நாட்டின் “ஸ்லிம்” விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்ய ஏற்கெனவே விண்கலத்தை அனுப்பி இருந்தன. இதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக  விண்ணில செலுத்தியது. இந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுத், தற்போது தனது ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஆய்வில் நிலவில் கந்தகம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களும், உறைந்த நிலையில் தண்ணீரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு மையமும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்தது. இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ‘ஸ்லிம்’ என்கிற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் சமீபத்தில் உருவாக்கினர். இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த கடந்த மாதம் மட்டும் 3 முறை திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறையும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில், செப்டம்பர் 7-ம் தேதியான இன்று “ஸ்லிம்” விண்கலத்தை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2-ஏ என்கிற ராக்கெட் மூலம் “ஸ்லிம்” விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 4 முதல் 6 மாதங்களில் நிலவைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விண்கலம் நிலவின் பாறைகளை ஆராய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், “ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மிஷன் என்கிற செயற்கைக்கோள், பூமியின் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இது விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ளவற்றின் வேகத்தை ஆராயும். இந்த தகவல் மூலம் வான் பொருட்கள் உருவானது எப்படி என்பதை கண்டறியப்படும். மேலும், பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்கிற மர்மத்தைத் தீர்க்கவும் வழி வகுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

இத்திட்டத்தில் ஜப்பான் நாடு வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தைத்  தரையிறக்கிய 5-வது நாடாக இருக்கும்.

Tags: japanLAUNCHSLIMSPACECRAFT
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

Next Post

14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies