இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 வெற்றிபெற்றதற்கு பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பி இருந்தன. ஆகவே, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அனுப்பியது. அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட வேண்டும் என்று லூனா-25 என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது.  ஆனால், இந்த விண்கலம் நிலவில் தரையிற்குவதற்கு முன்னதாகவே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டது.

அதேசமயம், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தன. இந்த வெற்றிக் களிப்போடு, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இத்திட்டம் வெற்றியடைந்தால் இந்தியாவுக்கு இன்னொரு மணிமகுடம் சூட்டப்படும்.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது வரலாற்று சாதனை என்று பாராட்டிய ஜோ பைடன், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், விண்வெளி ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: PM ModiChandrayaan 3Joe BidencongradulatesSuccess
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Next Post

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies