மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!

3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நீடித்து வரும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று முன்தினம் நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம், மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும், நள்ளிரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலநடுக்கம் குறித்து மொராக்கோ உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 2,012 பேர் பலியாகி இருக்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் அல் ஹவுஸ், மையப்பகுதி மற்றும் தாரூடன்ட் மாகாணங்களில் வாழ்ந்தவர்கள். மேலும், 2,059 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களில் 1,404 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3 நாள்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுக் கட்டடங்களிலும் நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் சேதமடைந்தது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், மொரோக்கோவின் அண்டை நாடாகவும், போட்டியாளர் நாடாகவும் கருதப்படும் அல்ஜீரியா, மொராக்கோ விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்த  2 ஆண்டுக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது உதவி விநியோகம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செயல்படுத்த ஏதுவாக தடையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.

Tags: earthquakemoroccokills 2000
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி பிரகடனம் ஏற்பு!

Next Post

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies