குற்ற வழக்குகளில் ஆடியோ - வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 14, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொலை வழக்கு பிறழ் சாட்சியால் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி – அதிலா பானு தம்பதிகளுக்கு முகமது அஸ்லம் (7) என்ற மகனும், அஜிராபானு (5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரோஸ்லின் என்பவர் கொலை வழக்கில் முக்கியச் சாட்சியான முத்துசாமி, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளித்ததால் ரோஸ்லின் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர், முத்துசாமி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கு, ரோஸ்லின் உறவினர் சாகுலுடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, முத்துசாமியின் கை விரலை சாகுல் உடைத்துள்ளார். இத்தகவலறிந்த அதிலா பானு, சாகுலை கடுமையாகத் திட்டியுள்ளார். இந்த சூழலில், கடந்த 8.11.2010 அன்று மகன், மகளுடன் அதிலா பானு கடத்தப்பட்டார்.

பின்னர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிலா பானு மற்றும் அவரது மகன், மகளின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு முதலில் மாநில காவல்துறையினர் வசமும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி, அதிலா பானு உறவினர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கூட விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அந்தளவுக்குச் சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 மற்றும் 164 பிரிவின் கீழ் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ – வீடியோ எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், திருத்தம் செய்யப்பட்டு, 14 ஆண்டுகளாகியும், இதை உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் கண்காணிக்காமல் உள்ளனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலத்தில் ஆடியோ- வீடியோ காட்சி முறையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பிறழ் சாட்சியம் தடுக்கப்படும். ஆகவே, முக்கிய வழக்குகளில் 161 வாக்குமூலங்களை ஆடியோ- வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும் என உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர்.

Tags: Madurai high courtOrderDGPHome secretaryAudio Video Statementwitness
Share
Tweet
SendShare
Previous Post

மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!

Next Post

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies