பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2023, 09:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழல் திமுக என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளிகள் மீதும், பக்தர்கள் மீதும் காவல்துறை மூலம் திமுக அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு கொண்டிருப்பதாக அறிகிறேன். பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பது சுழற்சிப் பொருளாதாரம் ஆகும். மதப் பாகுபாடின்றி, சமூகத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பண்டிகைகள் மூலம் பலனடைவார்கள்.

பண்டிகைகள் மூலம் நடைபெறும் வணிகம் எளிய மக்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தின் அடிப்படையாகும். பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தடை செய்ய முயற்சிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது, அடித்தட்டு மக்களே. எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்ளும் திமுகவினருக்கு, இந்த அடிப்படை கூடத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

திமுக அல்ல, திக அதற்கு முன்பிருந்த அவர்களின் தாய்க்கட்சியான நீதிக் கட்சி உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இல்லாத கட்டுப்பாடுகள், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் திடீரென ஏற்படுத்தப்படுவது, திமுகவுக்கு கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசு, யாரோ ஒன்றிரண்டு பேரைத் திருப்தி செய்ய மட்டும் பயன்படுத்தப்படுகிறது. திமுக எனும் கட்சியின் காலாவதியான கொள்கைகளை, பொதுவாகச் செயல்பட வேண்டிய தமிழக அரசின் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த மதப் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருந்ததில்லை. சமூகத்தில், அனைத்து மக்களும், ஜாதி மதப் பாகுபாடின்றி பண்டிகைக் காலங்களில் பயன்பெறுகிறார்கள். பொருளாதார ரீதியாக, எளிய மக்களுக்கான வாழ்வாதாரம், பண்டிகைக் காலங்களையே பெரிதளவில் சார்ந்திருக்கிறது.

இந்த நிலையில், சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் சார்ந்த பண்டிகைகளைத் தேவையில்லாத கட்டுப்பாடுகள் கொண்டு வந்து முடக்க முயற்சிப்பது, பொருளாதாரரீதியாக அனைவரையுமே பாதிக்கும்.

அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கையில், இந்து மதப் பண்டிகைகளைக் கட்டுப்படுத்தினால், மற்ற மத மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற திமுகவின் தீய எண்ணம் எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுமக்கள் அனைவருக்குமே திமுக செய்யும் துரோகம் இது.

வருடம் ஒரு முறை சில வாரங்கள் நடைபெறும் விநாயகர் சிலை செய்யும் தொழிலைத் தடுப்பது, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையே தடுக்க நினைக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும், எளிய தொழிலாளர்கள் மீதான இது போன்ற அடக்குமுறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பண்டிகைக் காலத்தில் ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வாதாரமும், பண்டிகைக் கொண்டாட்டங்களும் இதனால் பாதிக்கப்படுவதை காவல்துறை உணர வேண்டும்.

சோதனை என்ற பெயரில் சிலை செய்யும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதையும், வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டுவதையும் காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பது அனைவருக்குமே நல்லது, எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது !

Next Post

பதவி விலகு சேகர் பாபு: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பாஜகவினர் கைது

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies