பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை!-அண்ணாமலை!
Sep 13, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை!-அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Sep 12, 2023, 05:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முயற்சிக்குமா?  எனக் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிமன்ற வளாகத்திலிருந்தே பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில் வைத்து, மூவரையும் வெட்டியிருப்பது, சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.

பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்திலிருந்தே பயங்கரமான ஆயுதங்களுடன் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வரும் அதே கோவையில் இன்று, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் என காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ள தமிழ்நாடு காவல் ஆணையத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டு, திமுகவினருக்குச் சாதகமான செயல்களைச் செய்யவும், ஆளுங்கட்சியினரின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எதிர்க்கட்சியினரை மிரட்டப் பயன்படுத்துவதுமான திமுக அரசின் கையாலாகாத செயல்பாடுகளால், தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிமன்ற… pic.twitter.com/cVA9CxywSJ

— K.Annamalai (@annamalai_k) September 12, 2023

 

பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. வரும்முன் காப்பது என்பது தமிழக அரசைப் பொறுத்தவரை அறிந்திராத செயல்பாடாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இனியாவது காவல்துறையை ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முயற்சிக்குமா?  எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

நிபா வைரஸ்.. கேரள மக்கள் அச்சம்..

Next Post

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies