ஆசியக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா !
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கையில் உள்ள கொழும்பில் அமைந்துள்ள பிரம்மதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். கில் பவர்ப்ளே முடியும்வரை நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, ரோகித் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்து வழுவான நிலையில் இருந்தது.

அதன் பின்னர் அதிரடியாக ஆட நினைத்த கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் தனது விக்கெட்டை இழந்தபோது இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் வந்த விராட் கோலி தனது விக்கெட்டை 2 ரன்களில் இழக்க இவருக்கு அடுத்து ரோகித் சர்மாவும் 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக துனித் 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. இலங்கை அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 25 ரன்கள் எட்டியபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இலங்கை அண் ஒரு கட்டத்தில் 25.1 ஓவரில் 99 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியின் தனஞ்செயா மற்றும் துனித் கூட்டணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

இவர்களின் ஆட்டம் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வெற்றியை உறுதி செய்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் இவர்களின் கூட்டணியை ஒரு கட்டத்தில் ஜடேஜா முறியடித்தார். அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Tags: asian cup cricketindia cricketsrilanka cricket
Share
Tweet
SendShare
Previous Post

முதல்லே +2 பாடம் படிங்க!- சேகர் பாபு, உதயநிதி இருவருக்கும் அண்ணாமலை அறிவுறுத்தல்!

Next Post

கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies