சோம்பேறி குடிமகன் போட்டி!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோம்பேறி குடிமகன் போட்டி!

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ நாட்டில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெற்று வருகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாண்டெனெக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் கடந்த மாதம் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியைப் பொறுத்தவரை உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உணவு உண்பதாக இருந்தாலும், படுத்துக் கொண்டுதான் உணவு உண்ண வேண்டும். தவறுதலாகப் படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

போட்டியாளர்களுக்கு 8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்பொழுது, 27 நாட்கள் கடந்துள்ள நிலையில், 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் உள்ளனர். இடையிடையே 14 பேர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தப் போட்டியில் கடைசி வரை போட்டியின் விதிமுறையே மீறாமல் இருப்பவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் 1,000 யூரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 88,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே, படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. இந்தாண்டு இன்னும் 7 பேர் விடாமுயற்சியுடன் வெற்றிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: montenegro
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Next Post

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies