உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!
Sep 13, 2026, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!

அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் ஆய்வில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிப்பது, அமெரிக்காவின் மார்னிங் கல்சன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்கிற நிறுவனம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்து  ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பதாக 76 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் எதிர்ப்பதாகவும், 6 சதவிகிதம் பேர் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்விலும் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் 2-வது இடத்தில் சுவிட்சர்லாந்து பிரதமர் அலைன் பெர்செட் இருக்கிறார். இவருக்கு 64 சதவிகித மக்களின் ஆதரவு இருக்கிறது. அதேபோல, மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவிகித மக்கள் ஆதரவுடன் 3 இடத்தில் இருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவிகித மக்களின் ஆதரவும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 37 சதவிகித மக்களின் ஆதரவும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு 27 சதவிகித மக்களின் ஆதரவும் மட்டுமே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பின் உலகில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், “சர்வதேச அளவில் நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் இணையற்ற அடையாளமாக பிரதமர் மோடி திகழ்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modihighestglobalapproval
Share
Tweet
SendShare
Previous Post

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

Next Post

“யஷோபூமி” : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies