பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம்!
Sep 22, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம்!

5 மாநிலத் தேர்தல் குறித்து ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்கி இருக்கும் பா.ஜ.க., பல்வேறு யாத்திரைகளையும் நடத்தி வருகிறது. மேலும், நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தி வருகிறது.

அந்த வகையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கண்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களின் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார். இக்கூட்டத்தில் தொகுதி பஞ்சாயத்துத் தேர்தல்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கட்சியின் அழைப்பு மையங்கள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், ​வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து, அனைத்து தேசிய பொதுச் செயலாளர்கள் கருத்துகளையும் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார். இதுதவிர, தேர்தலுக்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மற்றும் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதோடு, ​​5 மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவது குறித்தும் ஜெ.பி.நட்டா விவாதித்தார்.

அதேபோல, தேர்தலுக்காகத் தயாரிக்கப்பட்ட விளக்கக் காட்சிகளும் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டன, மேலும், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களிலும், முக்கியத் தொகுதிகளிலும் மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதோடு, ஏற்கெனவே நடந்து முடிந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பா.ஜ.க.வால் அமைக்கப்படும் அழைப்பு மையங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அதேபோல, இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், முன்னோக்கிச் செல்லும் வழி குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

Tags: bjpdelhiGeneral Secretary Meeting5 State Election
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

ஐந்தாண்டு தொடர் வைப்புக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு!

Related News

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies