ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழப்பு!
Jul 27, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: மருந்துத் தட்டுப்பாடு காரணமா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மருந்து மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்படும் நிலையில், மருத்துவமனை டீன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் 12 பேரு உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மருத்துவமனையில் நிலவிவரும் மருந்து பற்றாக்குறைதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், 500 நோயாளிகள் அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவமனையில் 1,200 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டின.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் ஷ்யாம் ராவ் வகோட் கூறுகையில், “மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும் 6 பெண் குழந்தைகளும் இறந்திருக்கின்றன. இக்குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதுதவிர, 70 முதல் 80 வயது முதியவர்கள் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்கள், நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்தார்கள். இவர்களது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாகும். மேலும், 4 நோயாளிகள் பாம்புக் கடியால் உயிரிழந்தவர்கள்.

மேலும், இம்மருத்துவமனையில் இருந்து பல ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால், சில சிரமங்களை சந்தித்தோம். அதேபோல, நாங்கள் ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மருந்து வாங்கத் திட்டமிட்டோம். ஆனால், அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே, உள்ளூரில் மருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். அதோடு, 80 கிலோ மீட்டர் சுற்றளவில் இது போன்ற மருத்துவமனை இது ஒன்றுதான் இருக்கிறது. எனவே, நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆகவே, நோயாளிகள் இறப்புக்கு மருந்து பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில மருத்துவத்துறை அமைச்சர் ஹசன் முஸ்‌ரீஃப், “6 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கின்றன. அதேபோல, உயிரிழந்த 7 நோயாளிகள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 2 பேர் பாம்பு கடித்து இறந்து விட்டனர். மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இருக்கின்றனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மருத்துகள் இருப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கூறியிருப்பதோடு, இதுகுறித்த அறிக்கை கோரப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Tags: HospitalDeadMaharastra24 patients
ShareTweetSendShare
Previous Post

கோவையில் நிர்மலா சீதாராமன்!

Next Post

கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies