தொழிலக பாதுகாப்புப் படை பயிற்சி நிறைவு விழா!
Sep 13, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலக பாதுகாப்புப் படை பயிற்சி நிறைவு விழா!

வீரர்கள் நாட்டின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் 355 முக்கிய மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் நாள்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தொழிலக பாதுகாப்பு படை பிரிவின்  தலைவர் சரவணன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 11 மாத கால பயிற்சி முடித்த 47 மற்றும் 48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பயிற்சி மையத்தின் முதல்வர் சாந்தி ஜி ஜெயதேவ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென்மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த 772 வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் பயிற்சி முடித்த வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து இவ்விழாவில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல தலைவர் சரவணன், இன்று பயிற்சி நிறைவு செய்தவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாடாளுமன்றம் என முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதால், பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

1969 ஆம் ஆண்டு முதல் 355 மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் 28 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான பயணிகளுக்கு பாதுகாப்பு சேவை செய்து வருகின்றனர் என்றார். அதேபோல் பன்னாட்டு விமான நிலையங்களில் 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான விமான பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்தார்.

Tags: award policeIndustrial Security Force Training Completion Ceremony!
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு!

Next Post

அமைச்சர் பொன்முடி வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies