சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னைக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது. இதேபோல் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 22 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளும் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9,817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு வழங்க செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

3,300 மி.கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 2430 மி.கன அடியாக உள்ளது. 189 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 1,081 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 498 மி.கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் 3,123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

Tags: waterwater issue
ShareTweetSendShare
Previous Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Next Post

திமுகவில் அமைச்சராவதற்கான தகுதிகள் என்ன?

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies