நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்கிறது: இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரம்பரிய அறிவுமுறைகளை மீட்டெடுத்து, நவீன கல்விமுறைகளை கையாண்டு புத்துயிரூட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளைத் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தொடங்கிவைத்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாளந்தா போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் அடையாளமாகத் திகழ்கின்றன என்றும், உயர்தரமான கல்வி, அறிவுசார் ஆர்வம், அறிவு கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தி நமக்கு அவை வழிகாட்டுகின்றன என்று கூறினார்.

ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்று கூறிய அவர், முன்னெப்போதையும் விட  அவர்களது பணி சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது என்றார். நவீன உலகத்தின் சிக்கல்களுக்கிடையே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என்று  தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தியிருப்பதாகக் கூறிய அமைச்சர், நமது தேசிய கல்விக்கொள்கை 2020  கல்வியில் தொழில்நுட்பம், ஒளிமயமான, சமத்துவமான, முன்னேற்றம் மிகுந்த எதிர்காலத்தை நமது நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிசெய்யும் அரசின் அர்ப்பணிப்புக்கு தேசிய கல்விக்கொள்கை ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

அறிவையும், திறன்களையும் வளர்ப்பதுடன், முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் கல்வியை அனைவருக்கும் வழங்க இது வகைசெய்கிறது என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக்கொள்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் முறை,  செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் தேசிய திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிசெய்கிறது என்று  குறிப்பிட்டார்.

தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு, மெய்நிகர் ஆய்வகங்கள், அடல் புத்தாக்க இயக்கம் ஆகியவை புதுமையை ஊக்குவிப்பதுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

நாட்டின் முன்னேற்றத்தில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என்று கூறிய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், உலக அளவில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

Tags: Union Minister Subhash Sarkar
ShareTweetSendShare
Previous Post

மைசூர் தசரா: யானைகளுக்குச் சிறப்பு பயிற்சி!

Next Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்க இந்தியாவும், சவூதி அரேபியாவும் முடிவு!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies