பிரதமர் மோடி எழுதிய "கர்பா" பாடல்: இசை வீடியோ வெளியீடு!
Sep 21, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி எழுதிய “கர்பா” பாடல்: இசை வீடியோ வெளியீடு!

3 மணி நேரத்தில் 2.40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய “கர்பா” பாடல், இசை வீடியோவாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ வெளியான 3 மணி நேரத்தில் 2.40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகவும் பிரபலமாகவும், பரவலாகவும் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். ராஸ் கர்பா இசையில், பகவான் கிருஷ்ணர் மற்றும் கோபியர்களுக்கு இடையேயான உறவுகளின் கதைகள் மற்றும் உணர்ச்சிகளை இவ்விழா பிரதிபலிக்கிறது. இவ்விழா குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 9 இரவுகள் கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்கள் திறந்த வெளிகளில் கூடி இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி “கர்பா” பாடல் ஒன்றை எழுதினார். இந்தப் பாடல் தற்போது, ‘கார்போ’ என்கிற தலைப்பில், பாடகி த்வானி பானுஷாலி குரலில், தனிஷ்க் பாக்சி இசையமைப்பில், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியால் நிறுவப்பட்ட ஜஸ்ட் மியூசிக் என்ற இசை லேபிளின் கீழ் வீடியோவாக வெளியிடப்பட்டிருக்கிறது. 3 நிமிடம் 10 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, வெளியிடப்பட்ட 3 மணி நேரத்தில் 2.40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

இந்தப் பாடல் அடங்கிய வீடியோவை பிரதமர் மோடியை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பாடகி த்வானி பானுஷாலி, “பிரதமர் மோடியால் எழுதப்பட்ட இந்த கர்பா பாடலை இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சியும், நானும் மிகவும் ரசித்தோம். இதேபோல புதிய தாளம், அமைப்பு மற்றும் சுவையுடன் ஒரு பாடலை உருவாக்க விரும்புகிறோம். இந்தப் பாடலையும் வீடியோவையும் வெளியிட்டு எங்களுக்கு வாழ்க்கையை உயிர்ப்பிக்க உதவிய இசை லேபிளுக்கு நன்றி” என்று கூறியிக்கிறார்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் பிரதமர் மோடி, “இப்பாடல் நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இது பல நினைவுகளைத் திரும்பக் கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நான் எழுதவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக என்னால் ஒரு புதிய கர்பாவை எழுத முடிந்தது. அதை நவராத்திரியின்போது பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Thank you @dhvanivinod, Tanishk Bagchi and the team of @Jjust_Music for this lovely rendition of a Garba I had penned years ago! It does bring back many memories. I have not written for many years now but I did manage to write a new Garba over the last few days, which I will… https://t.co/WAALGzAfnc

— Narendra Modi (@narendramodi) October 14, 2023

 

Tags: Music AlbumGarba SongPM Modi
Share
Tweet
SendShare
Previous Post

இது வெறும் ஆரம்பம்தான்: இஸ்ரேல் பிரதமர் அதிரடி!

Next Post

அரசு மணல் குவாரிகளில் திடீர் சோதனை – E.D அதிரடி ரெய்டு

Related News

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies