விஏஓ-வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி: திமுக நிர்வாகிகள் கைது!
Sep 12, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஏஓ-வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி: திமுக நிர்வாகிகள் கைது!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், சட்டவிரோதமாக மண் அள்ளியதைத் தடுத்து நிறுத்திய ஆயக்குடி விஏஓ-வை, லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோர் காவல்துறை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன் மற்றும் பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்குச் சென்று, மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஆயக்குடி பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு வி.ஏ.ஓ கருப்பசாமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் கதவைத் திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும், கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விஏஓ மற்றும் உதவியாளரைக் கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆயக்குடி விஏஓ வை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

Tags: Arrestvao
Share
Tweet
SendShare
Previous Post

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை இரயில் இரத்து!

Next Post

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies