ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்தி கொள்ள வேண்டும்! - அண்ணாமலை.
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்தி கொள்ள வேண்டும்! – அண்ணாமலை.

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் என் மண் என் மக்கள்’ 46 -வது நாள் யாத்திரை இன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மாலை 4 மணிக்குத் துவங்குகிறது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் கோவை சென்றார்.

கோவை விமான நிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்பி டி.ஆர்.பாலு அதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள். பல காலமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் எழுப்பி வரும் கேள்விகள்.

தான் தமிழகத்தின் ஆளுநராக வந்தபிறகு, தமிழகத்தில் இருந்து சுதந்திரத்துக்குப் போராடிய வீரர்களின் பட்டியலைக் கேட்டதாகவும், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர்தான் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆளுநர் தேடிக் கண்டுபிடித்த பட்டியலில் 6 ஆயிரம் பேர் இருப்பதாக கூறியிருந்தார். அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருவதாகவும், பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், டி.ஆர்.பாலு ஆளுநருக்கு அளித்திருக்கும் பதிலில், ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ஏக வசனத்தில், ஆளுநரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டு அந்த அறிக்கையை டி.ஆர்.பாலு தயாரித்திருக்கிறார். இதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல, ஆளுநர் மேலும் இரண்டு முக்கியமான விசயங்களையும் முன்வைத்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள், சாதி முத்திரையில் அடைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைவராக உருவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது உண்மைதான். 1967-ல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, முக்கியமான தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துள்ளனர்.

இன்றளவும், தென் தமிழகத்தில் குருபூஜைக்கு சென்றால், 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் சாதியாக மாற்றி, சாதி கலவரம் வருமளவுக்கு திமுக அரசு அவ்வாறு மாற்றி வைத்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு குரு பூஜைக்கும் செல்வது ஒரு போர்க்களத்துக்கு செல்வது போன்று உள்ளது.

நான் கடந்த 3 ஆண்டுகளாக, தென் தமிழகத்தில் நிறைய குருபூஜை விழாக்களுக்கு செல்கிறேன். ஒவ்வொரு முறையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து தொடங்கி, குருபூஜை விழா நடைபெறும் இடம் வரை 25 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இப்படி தலைவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, சாதி கலவரம் ஏற்படும் நிலையை ஏற்படுத்தியது திமுக. ஆளுநர் இப்படி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் எப்படி அதிகமாகின்றன? சாதிக் கட்சிகள் எப்படி அதிகமாக இருக்கின்றன? அனைத்து சாதிக் கட்சிகளுமே சுதந்திரத்துக்குப் போராடிய தலைவர்களின் புகைப்படங்களைத்தான் வைத்துள்ளனர். எனவே, ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை.

அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார். கோபிசெட்டிப் பாளையத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது லட்சுமண ஐயர் குறித்து பேசிவிட்டு வந்தேன். அவர்தான் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முதல் சத்யாகிரகி.

மிக முக்கியமான தலைவர். அந்தமேடையில் நானே ஒரு 20 பேரின் பெயரை கோபிசெட்டி பாளையத்தில் இருந்து மட்டும் படித்தேன். எனவே, தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags: k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

பான் இன்றி பரிவர்த்தனை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை நிபந்தனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies