மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிசோராம் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 174 மொத்த வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ஆன்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ்தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு மொத்தம் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

அதாவது, மொத்த வேட்பாளர்களில் 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஹெலைட் என்னவென்றால், கோடீஸ்வர வேட்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் மிசோரம் மாநிலத் தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ்தான். இவரது சொத்து மதிப்பு 68.93 கோடி. இவர், அய்ஸ்வால் வடக்கு 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

அடுத்ததாக, செர்ச்சிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வன்லத்லுங்கா 55.6 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். சம்பாய் வடக்குத் தொகுதியில் மிசோரம் மக்கள் இயக்க வேட்பாளராக போட்டியிடும் ஜின்ஜாலா 36.9 கோடி ரூபாய் சொத்துகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். அதேபோல, இத்தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர். லுங்லே தெற்கு தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு 18.63 கோடி ரூபாய்.

மேற்கண்ட பணக்கார வேட்பாளர்களுக்கு மத்தியில், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன் எடேனாதான் மிகவும் ஏழை வேட்பாளர். இவர் தனக்கு ஒரே ஒரு அசையும் சொத்து மட்டும் இருப்பதாகவும், அதன் மதிப்பு 1,500 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, லாங்த்லாய் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஜேபி ருலசிங்கா தமது வேட்புமனுவில் தனக்கு 90.32 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தவறுதலாக குறிப்பிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.

அதேசமயம், 2018-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லால்ரிங்க செய்லோ தனக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவரது சொத்து மதிப்பு வெறும் 26.24 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: ElectioncandidateMizoram
Share
Tweet
SendShare
Previous Post

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Next Post

அடுத்த பிரதமர் அகிலேஷ் யாதவ் என்ற பேனரால் பரபரப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies