ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய தரிசன வரிசை வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்புப் பகுதிகளை வழங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வசதியுடன் கூடிய பல காத்திருப்பு அரங்குகள் உள்ளன. மேலும், இங்கு பக்தர்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஆடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், முன்பதிவு மற்றும் பிரசாத கவுன்ட்டர்கள், தகவல் மையம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த புதிய தரிசன வரிசை வளாகத்தின் அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின்போது,  நில்வண்டே அணையின் ‘ஜல் பூஜை’ மற்றும் அணையின் கால்வாய் வலையமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி,  ​’நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதல் தொகை கிடைக்கும்.

மேலும், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தவிர, குர்துவாடி-லத்தூர் சாலை இரயில் பிரிவு மின்மயமாக்கல், ஜல்கானை புசாவலுடன் இணைக்கும் 3-வது மற்றும் 4-வது இரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை 166-ன் (தொகுப்பு-I) சாங்க்லி முதல் போர்கான் வரையிலான 4 வழிச்சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மன்மட் டெர்மினலில் கூடுதல் வசதிகள், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: PM ModiMaharastraShirdi sai baba temple
Share
Tweet
SendShare
Previous Post

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

Next Post

மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies