சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!
Oct 1, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான  சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனால் நவம்பர் 24ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வெளியே வந்தார். தனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் சந்திரபாபு நாயுடு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: chandrababu naiduAndra Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் இலக்கு!

Next Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Related News

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies