கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!
Oct 2, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹைட்ரஜன் வாகனங்கள் தயாரிப்பிற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் தயாரிக்கும் முயற்சியில் இந்தோ-ஜப்பான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்து, அதை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கார்பன் உமிழ்வை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, 2030ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், ஹைட்ரஜனைத் தயாரிப்பதற்கு அவசியமான எலக்ட்ரோலைசர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தோ-ஜப்பான் தொழில்முறை ஆலோசனை நிறுவனமான K-KCCS India, ஜப்பானின் H2 Innovation நிறுவனத்துடன் இணைந்து, கோவையில் ஹைட்ரஜன் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக H2 Innovation நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மோரி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்து அரசின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும், ஹைட்ரஜன் உற்பத்திக்காக பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுடன் இணையலாம் என்றும் ஜப்பான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜப்பானில் ஹைட்ரஜனை பயன்படுத்தி கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக K-KCCS India நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிப்பது, போக்குவரத்துத் துறையில் ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்தோ-ஜப்பான் தொழில்முறை ஆலோசனை நிறுவனமும், ஜப்பான் நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் செயல்திட்டம், எதிர்காலத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் வாகன பயன்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: hydrogenhydrogen productionNational Green Hydrogen Missioncentral governmentcoimbatoreIndo-Japanese joint venture
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

Next Post

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Related News

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies