4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. இந்நிலையில் இந்திய அணியினரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய பிரதமர், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இது உங்களின் சாதனைகள் அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறன்களை கோடிட்டுக் காட்டுகிறது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய உங்களை சந்தித்தது மிகவும் பெருமையாகவும் உத்வேகமாகவும் இருந்தது.
ஒவ்வொருவரும் ஒரு பில்லியன் கனவுகள் மற்றும் ஆசைகளை சுமந்துள்ளனர்.
உங்களின் வாழ்க்கைப் பயணங்கள் துன்பங்களைத் தாண்டி நம் அனைவரையும் மகத்தான பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.