மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!
Jul 29, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் 5 மாநிலங்களவை எம்.பி.க்களின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும், சிறப்பு உரிமைகள் மீறப்பட்டதாக 5 எம்.பி.க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ராகவ் சதா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, தனது சஸ்பெண்ட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதன் பராசத், “ராகவ் சத்தாவுக்கு அவையின் கண்ணியத்தை பாதிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது. இதற்காக அவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், “மாநிலங்களவைத் தலைவர் (ஜக்தீப் தன்கர்) ஆம் ஆத்மி எம்.பி.யின் மன்னிப்பை அனுதாபத்துடன் பரிசீலனை செய்து, இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழியைக் காண வேண்டும். மிகவும் இளையவரான ராகவ் சத்தா முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, அட்டார்னி ஜெனரல் கூறுகையில், “நெறிமுறைக் குழு இன்று கூடுகிறது. சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இதன் பிறகு, இவ்வழக்கு நிலவரம் குறித்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலிடம் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளிக்கு பிறகு ஒத்திவைத்தது.

Tags: courtaam aadmi partyMP Raghav chadha
ShareTweetSendShare
Previous Post

100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்! –  ஆளுநர் ரவி பேச்சு

Next Post

சீன பொருளாதாரம் : வடிவமைக்க மனித உருவ ரோபோக்கள்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies