மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்! - வானதி சீனிவாசன்
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்! – வானதி சீனிவாசன்

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்று நாட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு, தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2022 செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது ஏழை, நடுத்தர மக்கள் கூட, இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்” என்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால், 2021சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், , ‘மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டை கணிக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று திமுக வாக்குறுதி அளித்தது.

இதை நிறைவேற்றி இருந்தால், சாதாரண ஏழை மக்கள் இப்போது செலுத்தும் மின் கட்டணத்தில் பாதியை கூட செலுத்த வேண்டிய நிலை இருக்காது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டு ஓராண்டு முடியும் முன்பே தொழில் துறையினருக்கான மின் கட்டணத்தை திமுக அரசு யூனிட்டுக்கு 15 முதல் 25 காசுகள் வரை உயர்த்தியுள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறிப்பக ஜவுளி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மின் கட்டண உயர்வு பெரும் சுமையாகி விட்டது. அதுவும் சிறிய தொழில் நடத்துபவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர முடியாதது மட்டுமல்ல, இருப்பதையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான், மின் கட்டண உயர்வு, நூல் உயர்வைக் கண்டித்து நவம்பர் 5-ம் தேதி (இன்று) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனால், ஜவுளித் தொழில் சார்ந்துள்ள தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்று நாட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு, தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம்.

எனவே, ஜவுளித் தொழில் உற்பத்தி நிறுத்தம் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பாதுக்கும். தமிழ்நாடின் நிதி நிலைமை மேலும் மோசமாகும். எனவே, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு குறைக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjpeb bill
Share
Tweet
SendShare
Previous Post

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Next Post

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பது தொடரும்: நட்டா உறுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies