பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Sep 5, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக நினைத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாகப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையையே குஜராத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் அவதூறாகப் பேசினார். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம்,  பிரியங்கா காந்திக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: Election commissionpriyanka gandhiSent notice
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா!

Next Post

தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies