காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!
Jun 12, 2026, 12:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன.

ஆகவே, பா.ஜ.க. தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலரும் தெலங்கானா மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் திகானாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வரவிருக்கும் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். ஆகவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதாகவும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் கே.சி.ஆர். வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?

அதேபோல, கல்லூரி கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரா? காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் சீனப் பொருட்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் கிடையாது. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் இறுதியில் பி.ஆர்.எஸ்.ஸுக்கு மாறிவிடுவார்கள்.

இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் பி.ஆர்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், கே.சி.ஆர். மீண்டும் முதல்வராக்கப்படுவார்.

அதற்கு பதிலாக பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்யும்” என்றார்.

Tags: Home ministerbjpTelanganaelection compaignAmit sha
ShareTweetSendShare
Previous Post

பெண் செய்தியாளர் கொலை வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

Next Post

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies