தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டின் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிக அளவில் ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகளுக்காக இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், 60-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்களிடையே புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்கலைக்கழகத்தில் ஒரு தொழில் பாதுகாப்பு மையம் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளூர் தேவைகளை மனதில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அந்த கண்டுபிடிப்புகளை உரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது முழு உலகமும் ஒரு கிராமத்தைப் போல உள்ளது என்றும் அவர் கூறினார். எந்த நிறுவனமும் நவீன உலகத் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். நாக்பூர் பல்கலைக்கழகம் பல்துறை ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே, உலகின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தொழிநுட்பத்தின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த குடியரசுத்தலைவர், எந்தவொரு வளத்தையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்தையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், அது நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறினார்.

அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால், அது ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நம் வாழ்க்கையை எளிதாக்கும் வேளையில் அதில் உள்ள டீப்ஃபேக் தொழில்நுட்பம் சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

பட்டம் பெறுவது கல்வியின் முடிவல்ல என்றும் மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொழில்நுட்பத் துறையில் விரைவான மாற்றங்கள் நிகழும்போது, தொடர்ந்து அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம்மைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் நாடு மற்றும் சமூகத்தின் சொத்து என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய அவர், பின்னடைவுகளைக் கண்டு பின்வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த சூழ்நிலைகளை அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று குடியரசுத்தலைவர்  திரெளபதி முர்மு கூறினார்.

Tags: NagpurPresident Mrs. Draupadi MurmuRashtrasand Dukadoji MaharajDraupadi Murmu speech
Share
Tweet
SendShare
Previous Post

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Next Post

‘ANIMAL’ – திரைப்படம் முதல் நாளில் 100 கோடி வசூல் சாதனை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies